ரூபாய் மதிப்பு மீண்டும் உயர்வு

தினகரன்  தினகரன்
ரூபாய் மதிப்பு மீண்டும் உயர்வு

மும்பை: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நேற்று 49 காசு அதிகரித்து ரூ.69.53 ஆனது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 70 ரூபாய்க்கு மேல் சரிந்தது. பின்னர் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானதும் சற்று ஏற்றம் கண்டது. ஆனால், அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப்போர் காரணமாக அந்நிய செலாவணி சந்தை ஆட்டம் கண்டது. இருப்பினும் மத்தியில் நிலையான ஆட்சி அமைந்ததால் நேற்று மீண்டும் 49 காசு அதிகரித்துள்ளது. இந்த வாரத்தில் இதுவரை ரூபாய் மதிப்பு 70 காசு உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் வர்த்தகம் முடிந்த போது ரூபாய் மதிப்பு ரூ.70.02 ஆக இருந்தது. நேற்று காலை வர்த்தகம் துவங்கியபோது ரூ.69.75 ஆக ஆனது. வர்த்தக இடையில் அந்நிய செலாவணி பரிவர்த்தனை சந்தையில் ரூ.69.81 முதல் ரூ.69.50 வரை இருந்தது. மாலையில் சற்று சரிந்தாலும் முந்தைய நாளை விட 49 காசு உயர்ந்து ரூ.69.53 என முடிந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று இந்திய சந்தையில் ரூ.2,026.33 கோடி முதலீடு செய்தனர். மேலும், கச்சா எண்ணெய் பேரலுக்கு டாலர் 68.56 ஆக குறைந்தது. இதுவும் ரூபாய் மதிப்பு உயர காரணமாக அமைந்துள்ளது.

மூலக்கதை