‘ஆர்கானிக்’ விவசாயத்திற்கு சலுகை

தினமலர்  தினமலர்
‘ஆர்கானிக்’ விவசாயத்திற்கு சலுகை

புதுடில்லி: சிறிய விவசாயிகள், ‘ஆர்கானிக்’ பொருட்களை, 2020 ஏப்ரல் வரை, சான்றிதழ் இன்றி விற்பனை செய்ய, தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

ரசாயன கலப்பின்றி, இயற்கை உரம் மூலம் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களை, ‘ஆர்கானிக்’ தயாரிப்பு என, அழைக்கின்றனர். இத்தகைய உணவுப் பொருட்களுக்கு, ‘என்.பி.ஓ.பி., மற்றும் பி.ஜி.எஸ்.,’ அமைப்புகள் சான்றிதழ் வழங்குகின்றன. இந்த அமைப்புகளின் விதிமுறைகளை பூர்த்தி செய்ய முடியாத சிறிய விவசாயிகள், ஆர்கானிக் பொருட்களுக்கான சான்று பெற முடியாத நிலை உள்ளது.

எனவே, ஆண்டுக்கு, 12 லட்சம் ரூபாய் விற்றுமுதல் உள்ள, சிறிய விவசாயிகள், ஆர்கானிக் உணவுப் பொருட்களை, 2020, ஏப்ரல் வரை, சான்றிதழ் இன்றி விற்பனை செய்ய, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையம் அனுமதித்துள்ளது. இதே காலத்தில், ஆண்டுக்கு, 50 லட்சம் ரூபாய் விற்றுமுதல் உள்ள, வலைதள சந்தை நிறுவனங்களும், ஆர்கானிக் பொருட்களை விற்பனை செய்ய, அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனினும், ‘விற்பனை பொருட்களில், ஆர்கானிக் என்பதை குறிக்கும், ‘ஜெய்விக் பாரத்’ முத்திரையை பயன்படுத்தக் கூடாது’ என, ஆணையம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை