கட்டுமான திட்டங்களுக்கு 2 நாட்களில் ஆய்வறிக்கை

தினமலர்  தினமலர்
கட்டுமான திட்டங்களுக்கு 2 நாட்களில் ஆய்வறிக்கை

தொழில் வளர்ச்­சியை விரை­வு­ப­டுத்­தும் வகை­யில், கட்­டு­மான திட்­டங்­க­ளுக்கு விண்­ணப்­பம் வந்­த­தில் இருந்து, 48 மணி நேரத்­துக்­குள் ஆய்­வ­றிக்­கையை, சம்­பந்­தப்­பட்ட துறை­யி­னர் அளிப்­பதை கட்­டா­ய­மாக்க முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

கட்­டு­மான திட்­டங்­கள் அனு­மதி நடை­மு­றை­யில் மேற்­கொள்ள வேண்­டிய சீர்­தி­ருத்­தங்­களை முடிவு செய்­வ­தற்­கான குழு கூட்­டம், சென்னையில், சமீ­பத்­தில் நடந்­தது.

இக்­கூட்­டத்­தில் எடுக்­கப்­பட்ட முடி­வு­கள் விப­ரம்: கட்­டு­மான திட்ட அனு­ம­திக்­கான விண்­ணப்­பங்­கள் மீது, சம்­பந்­தப்­பட்ட பல்­வேறு துறை­கள் எடுக்­கும் நட­வ­டிக்­கை­கள், ‘ஆன்­லைன்’ முறை­யி­லேயே விண்­ணப்­ப­தா­ர­ருக்கு தெரி­விக்க வேண்­டும். மேலும், பாதிப்பு குறை­வான திட்­டங்­க­ளுக்­கான கட்­டு­மான அனு­மதி வழங்­கும் நடை­முறை எளி­மைப்­ப­டுத்­தப்­படும்.

இது தொடர்­பாக, வீட்டு வசதி மற்­றும் நகர்ப்­புற வளர்ச்சி துறை, புதிய கொள்கை முடிவை விரை­வில் அறி­விக்க உள்­ளது. கட்­டு­மான திட்ட அனு­ம­திக்கு தேவை­யான கள ஆய்வு அறிக்­கை­கள் விண்­ணப்­பம் பெறப்­பட்­ட­தில் இருந்து, 48 மணி நேரத்­துக்­குள் பதிவு செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். இவை உள்­ளிட்ட பல்­வேறு முடி­வு­கள், இக்­கூட்­டத்­தில் எடுக்­கப்­பட்­டன.

– நமது நிரு­பர் –

மூலக்கதை