வெயிலின் கொடுமை தாங்க முடியல! காருக்கு சாணம் பூசி பயணம்: குஜராத் பெண் விநோத முயற்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
வெயிலின் கொடுமை தாங்க முடியல! காருக்கு சாணம் பூசி பயணம்: குஜராத் பெண் விநோத முயற்சி

அகமதாபாத்: வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க, குஜராத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய காருக்கு சாணம் பூசி பயணிக்கிறார்.   குஜராத் மாநிலம் அகமதபாத்தில் வசிக்கும் ஷேஜல் ஷா என்ற பெண், வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வித்தியாசமான முறையை கையாண்டுள்ளார்.   இவர், தன்னுடைய கார் முழுவதும் மாட்டு சாணத்தால் மொழுகியுள்ளார். மாட்டு சாணத்தால் காரின் மேற்பரப்பை மூடும்போது காரின் உள்ளே வரும் வெப்ப  காற்று கணிசமாக தடுக்கப்படுவதாக கூறுகிறார்.

மேலும் காரில் பயணம் செய்யும்போது அனல் காற்று நம்மீது வீசாது என்றும், காரின் சீட் சூடேறாமல் இருக்கும்  என்றும் கூறினார்.

கிராமப் புறங்களில் வீட்டுத் தரையில் சாணியைக் கரைத்துவிட்டு மெழுகுவது வழக்கம்.

சில வீடுகளில் தரையில் மட்டுமின்றி சுவற்றிலும் சாணியால்  மெழுகுவார்கள். இதற்குப் பசுஞ்சாணியை பயன்படுத்துவார்கள்.

பசுவின் சாணியால் மெழுகுவது தரை மற்றும் சுவற்றை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.   கோடையிலும் வெப்பம் தெரியாமல் இருக்கும். இதுமட்டுமல்ல, பசுஞ்சாணி கிருமிகளை அண்டவிடாமல் தடுப்பதுடன் கொசுத் தொல்லையை தவிர்க்கவும்  உதவும்.

இந்தக் காலத்தில் பல வீடுகளும் டைல்சுக்கு மாறிவிட்டதால், சாணியால் தரையை மெழுகும் பழக்கம்கூட தற்போது அரிதாக உள்ளது.

இருந்தும், வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க, காஸ்டிலியான காருக்கு சாணம் பூசிய குஜராத் பெண்ணின் கார், தற்போது சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.

.

மூலக்கதை