ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் 30ல் பதவியேற்பு அமைச்சராகிறார் நடிகை ரோஜா

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் 30ல் பதவியேற்பு அமைச்சராகிறார் நடிகை ரோஜா

திருமலை: ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில் அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி விஜயவாடாவில் அளித்த பேட்டி: ஆந்திர மாநில சரித்திரத்தில் எப்போதும் இல்லாத வகையில் 25 மக்களவை தொகுதியில் 22 தொகுதியிலும் வெற்றி பெற்றிருப்பதும் 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 149 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றிருப்பதும் புதிய அத்தியாயமாக இருக்கும். பொதுமக்கள் எந்த அளவிற்கு என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தார்களோ அந்த நம்பிக்கையை காப்பாற்றுவேன்.

விஜயவாடாவில் 30ம் தேதி முதல்வராக பதவி ஏற்றுக் கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

நடிகை ரோஜா ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், நகரி சட்டப்பேரவை தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் நடிகையும் அக்கட்சியின் எம்எல்ஏவுமான ரோஜா மீண்டும் போட்டியிட்டார். அவர் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் பானுபிரகாஷை 2681 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவருக்கு மின்சாரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சந்திரபாபு ராஜினாமா
ஆந்திராவில் கடந்த மாதம் 11ம்தேதி 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் 25 மக்களவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது.

நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 150 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த தெலுங்கு தேசம் கட்சி 24 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஒரு இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் முதல்வருமான சந்திரபாபு நாயுடு நேற்று மாலை தன் ராஜினாமா கடிதத்தை பேக்ஸில் கவர்னர் நரசிம்மனுக்கு அனுப்பினார்.

.

மூலக்கதை