கேரளாவில் பாஜ தோல்வி சினிமா டைரக்டர் மொட்டை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேரளாவில் பாஜ தோல்வி சினிமா டைரக்டர் மொட்டை

திருவனந்தபுரம்: கேரள சினிமா உலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் அலி அக்பர். முகமுத்ரா, ஜூனியர் மான்ட்ரேக், சீனியர் மான்ட்ரேக், குடும்ப வார்த்தகள் உள்பட ஏராளமான படங்களை இயக்கி உள்ளார்.

தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அப்போது திருவனந்தபுரம் பாஜ வேட்பாளர் கும்மனம்ராஜசேகரன் தோல்வியடைந்தால் மொட்டை அடிப்பேன் என கூறியிருந்தார்.

இதற்கிடையே நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் கும்மனம்ராஜசேகரன் தேல்வியடைந்தார். இதையடுத்து அவரது சவாலை நினைவு கூர்ந்து பலரும் சமூக வலைதளங்களில் தகவல் பரப்பினர்.

இந்த நிலையில் அலி அக்பர் இன்று தனது மொட்டையடித்த புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பது, சபதம் எடுத்தால் அதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே நான் மெட்டையடித்துள்ளேன்.

திருவனந்தபுரத்தில் பாஜ வேட்பாளர் கும்மனம் ராஜசேகரன் தோல்வியடைந்தது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவனந்தபுரம் வாக்காளர்கள் அவரை தோற்கடிப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை.

நான் எடுத்த சபதத்தை நிறைவேற்றியுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

.

மூலக்கதை