கெஜ்ரிவாலை நினைத்து வெட்கப்படுகிறேன்! கவுதம் கம்பீர் குற்றச்சாட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கெஜ்ரிவாலை நினைத்து வெட்கப்படுகிறேன்! கவுதம் கம்பீர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: கிழக்கு டெல்லியில் பாஜ சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் அதிஷி போட்டியிடுகிறார். டெல்லி துணைமுதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவருமான மணீஷ் சிசோடியா, அதிஷி ஆகியோர், கம்பீர் குறித்து பல்வேறு குற்றச்சட்டுகளை முன்வைத்தனர்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் தனது சுட்டுரையில் கவுதம் கம்பீர், ‘தேர்தல் வெற்றிக்காக சொந்தக் கட்சிப் பெண்ணின் கண்ணியத்தை சிதைக்கும் உங்களது நடவடிக்கையை வெறுக்கிறேன் கெஜ்ரிவால்.

கெஜ்ரிவால் போன்ற ஒருவர் முதல்வராக இருப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன்’ என்றார்.

.

மூலக்கதை