சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் காலமானார்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் காலமானார்!

சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் வயோதிகம் காரணமாக காலமானார்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோர பகுதியான தேங்காய்ப்பட்டினம் என்ற சிறு ஊரில் 1944-ம் ஆண்டு பிறந்தவர் தோப்பில் முகம்மது மீரான். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் புதினங்கள் மற்றும் சிறுகதைகள் எழுதியுள்ளார்.

சாய்வு நாற்காலி என்ற பெயரில் தோப்பில் முகம்மது மீரான் எழுதிய புதினத்துக்கு 1997-ம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.  ஒரு கடலோர கிராமத்தின் கதை, துறைமுகம், ஆகியவை அவரின் பெயர் சொல்லும் புதினங்களாகும்.

திருநெல்வேலியை அடுத்துள்ள, பேட்டை,  வீரபாகு நகரில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தார். வயோதிகம் காரணமாக அவருடைய வீட்டில் வைத்து காலமானார். அவருக்கு வயது 75.  
மறைந்த "தோப்பில்" முகம்மது மீரானுக்கு, மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

தோப்பில் முகம்மது மீரான் மறைவுக்கு வலைத்தமிழ் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

மூலக்கதை