2016ல் பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல் மீது வழக்கு பதிய கோரிக்கை

தினகரன்  தினகரன்
2016ல் பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல் மீது வழக்கு பதிய கோரிக்கை

புதுடெல்லி: கடந்த 2016ம் ஆண்டு பிரதமர் மோடியை விமர்சித்தது தொடர்பாக ராகுல்காந்தி மீது வழக்கு பதிய வேண்டும் என டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த புகார் மாவட்ட நீதிபதிக்கு  அனுப்பப்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2016ம் ஆண்டு விவசாயிகள் யாத்திரையை முடித்த பின்னர் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ‘‘இந்தியாவிற்காக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய ராணுவ வீரர்களின் ரத்தத்தின்  பின்னால் பிரதமர் மோடி ஒளிந்து கொண்டிருக்கிறார். அவர்களது தியாகத்தை சுரண்டுகிறீர்கள். இது மிகவும் தவறானது” என கூறியிருந்தார். இந்நிலையில் பொதுக்கூட்டத்தில் இதுபோன்று பேசிய ராகுல்காந்தி மீது தேச துரோக வழக்கை பதிவு செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிடக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுவை  விசாரித்த ெமட்ரோபாலிடன் மேஜிஸ்திரேட் ப்ரீத்தி பரேவா, ‘‘குற்றம்சாட்டப்பட்டுள்ளவர் தற்போதும் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். இந்த வழக்கை எடுப்பதற்கான அதிகாரம் இந்த நீதிமன்றத்துக்கு இல்லை. எனவே உரிய நீதிமன்றத்தில் விசாரிக்கும்படி இந்த வழக்கு மாவட்ட நீதிபதிக்கு அனுப்பப்படுகின்றது” என்றார்.

மூலக்கதை