பிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1 ஆக பதிவு

தினகரன்  தினகரன்
பிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1 ஆக பதிவு

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் இன்று மாலை 6.1 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. புவியியல் அமைப்பின்படி நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டின் கலுஸான் தீவில் இன்று மாலை சுமார் 5 மணியளவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியின் அடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் மையம்கொண்ட இந்த நிலநடுக்கத்தால் லுஸான் தீவில் உள்ள பல கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகள் போன்ற திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர். இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

மூலக்கதை