வெயிலின் உக்கிரத்தால் வெறிச்சோடும் கடற்கரை

தினமலர்  தினமலர்
வெயிலின் உக்கிரத்தால் வெறிச்சோடும் கடற்கரை

புதுச்சேரி:வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், புதுச்சேரி கடற்கரை சாலையில் பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.சுற்றுலா பயணிகள் விரும்பி கூடும் இடமாக புதுச்சேரி கடற்கரை சாலை அமைந்துள்ளது.புரமோனேட் கடற்கரை என்றழைக்கப்படும் 1.5 கி.மீ., நீளமுள்ள அழகிய கடற்கரையில், கடல் அழகை ரசித்தபடியே நடைபயிற்சி செய்வர். கடற்கரையில் குழந்தைகளுடன்அமர்ந்து கொண்டு உல்லாசமாக பொழுதை கழிப்பர்.இந்நிலையில், கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் பெரும்பாலும் பகல் நேரங்களில் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து வெளியே வராமல் உள்ளனர்.பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையிலும், பகல் நேரங்களில் வீட்டை விட்டுவெளியே வராமல் மாணவர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால், பகல் நேரங்களில் காந்தி திடல் மற்றும் கடற்கரை சாலையில் மக்களின் நடமாட்டம் மட்டுமின்றி வாகனங்கள் செல்லும் காட்சியை கூட காண முடியாமல், வெறிச்சோடி காணப்பட்டது.புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் எதிர்பார்த்த அளவில் இல்லை.

மூலக்கதை