தமிழகத்தில் 38 தொகுதியிலும், புதுச்சேரி மக்களவை தொகுதியிலும், மொத்த வாக்குப்பதிவு 70 சதவீதம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
தமிழகத்தில் 38 தொகுதியிலும், புதுச்சேரி மக்களவை தொகுதியிலும், மொத்த வாக்குப்பதிவு 70 சதவீதம்!

தமிழகத்தில் 38  தொகுதிகளிலும், புதுச்சேரி மக்களவை தொகுதியிலும் வாக்குப்பதிவு முடிந்தது. மொத்தம் 70 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகள். புதுச்சேரி மக்களவைத் தொகுதி. மற்றும் இடைத்தேர்தலாக 18 சட்டமன்ற தொகுதியிலும் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. 

மாலை 6 மணி நிலவரப்படி தமிழகத்தில் 69.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். 

அதேபோல் இடைத்தேர்தல் நடந்த 18 சட்டமன்ற தொகுதிகளில் 71.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்து உள்ளார். 

அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 57.05 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. 

இடைத்தேர்தலில் அதிகபட்சமாக 86.96, குறைந்தபட்சம் சாத்தூரில் 60.87 வாக்குகள் பதிவாகி உள்ளன. இதே போல் புதுச்சேரி மக்களவை தொகுதியில் 6 மணி நிலவரப்படி 78.23% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.  

தட்டாஞ்சாவடி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 6 மணி நிலவரப்படி 72.67% வாக்குகள் பதிவாகியுள்ளது. 6 மணி நிலவரப்படி மதுரை மக்களவை தொகுதியில் 60.12% வாக்குகள் பதிவாகியுள்ளது.

கூட்டத்தை சமாளிக்க அரக்கோணம் கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்து உள்ளார்.

வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டதாக எந்த தகவலும் இல்லாத வகையில் அமைதியான வாக்குப்பதிவு நடைபெற்றது என்று கூறினார்.

இடைத்தேர்தல் வாக்கு சதவீத விவரம் வருமாறு:

பூந்தமல்லி - 79.14 பெரம்பூர் - 61.06 திருப்போரூர் - 81.05 சோளிங்கர் - 79.63 குடியாத்தம் - 81.79 ஆம்பூர் - 76.35 ஓசூர் - 71.29 பாப்பிரெட்டிப்பட்டி - 83.31 அரூர் - 86.96 நிலக்கோட்டை - 85.50 திருவாரூர் - 77.38 தஞ்சை - 66.10 மானாமதுரை - 71.22 ஆண்டிபட்டி - 75.19 பெரியகுளம் - 64.89 சாத்தூர் - 60.87 பரமக்குடி - 71.69 விளாத்திகுளம் 78.06 

தமிழகத்தில்  காலை 7 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். 

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் புதிதாகத் திருமணம் செய்து கொண்ட மணமகன் முத்துராம், மணக்கோலத்தில் தனது வாக்குகளை செலுத்தினார். சென்னை மாவட்டம் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 144 பேர் முதல் முறையாக வாக்களித்தனர்.

தமிழகத்தில் மதுரை தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 37 தொகுதிகளிலும் சரியாக மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 

நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் நிலையில், பதிவாகும் வாக்குகள், வருகிற மே 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

மூலக்கதை