'மோடி' திரைப்படம் பாருங்கள்! தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு

தினமலர்  தினமலர்
மோடி திரைப்படம் பாருங்கள்! தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு

புதுடில்லி, பிரதமர் மோடியின் வாழ்க்கையை விவரிக்கும் திரைப்படத்தை பார்த்து, அறிக்கை வழங்கும்படி, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாலிவுட் நடிகர், விவேக் ஓபராய் நடிப்பில், ஒமுங் குமார் இயக்கிய, பி.எம்.மோடி திரைப்படம், 11ல் வெளியாக இருந்தது.ஆனால், 'லோக்சபா தேர்தல் முடியும் வரை, இந்த படத்தை வெளியிடக் கூடாது' என, தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

மூலக்கதை