கோயிலில் துலாபாரம் கொடுக்கும்போது தராசு உடைந்து தலையில் விழுந்து சசிதரூர் எம்பி படுகாயம்

தினகரன்  தினகரன்
கோயிலில் துலாபாரம் கொடுக்கும்போது தராசு உடைந்து தலையில் விழுந்து சசிதரூர் எம்பி படுகாயம்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் நேற்று காலை கோயிலில் துலாபாரம் கொடுக்கும் போது தராசு உடைந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக சசிதரூர் எம்பி போட்டியிடுகிறார். கடந்த சில தினங்களாக அவர் திருவனந்தபுரம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்கிறார். நேற்று காலை திருவனந்தபுரத்தில் உள்ள காந்தாரியம்மன் கோயிலில் துலாபார வழிபாடு நடத்தினார். அப்போது அவரது எடைக்கு இணையாக வாழைக்குலை காணிக்கை செலுத்தினார். இதற்காக அவர் தராசில் ஏறி அமர்ந்து இருந்தார். அப்போது திடீரென தராசு உடைந்தது. அப்போது தராசில் இருந்த இரும்பு கம்பி அவரது தலையில் விழுந்தது. அதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை திருவனந்தபுரம் பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது தலையில் 8 தையல் போடப்பட்டது. தொடர்ந்து அவருக்கு தலைக்காய அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து நேற்று அவரது பிரசாரம் ரத்து செயயப்பட்டது.

மூலக்கதை