முரளி மனோகர் கதறல் ஐய்யய்யோ அத நான் எழுதல

தினகரன்  தினகரன்
முரளி மனோகர் கதறல் ஐய்யய்யோ அத நான் எழுதல

புதுடெல்லி: ‘‘பாஜ தலைவர் அத்வானிக்கு நான் எந்த கடிதமும் எழுதவில்லை. என் பெயரில் போலியாக சமூக வலைதளங்களில் கடிதம் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தேர்தல் ஆணையத்துக்கு முரளி மனோகர் ஜோஷி கோரிக்கை விடுத்துள்ளார். பாஜ மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் ஓரங்கட்டப்பட்டு விட்டனர். இதை தொடர்ந்து, அத்வானி தனது பிளாக்கில் வெளியிட்ட கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோல், முரளி மனோகர் ஜோஷி கட்சி தலைமையை விமர்சித்து எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு, முரளி மனோகர் ஜோஷி அனுப்பிய புகாரில்,  ‘எல்.கே.அத்வானிக்கு நான் எழுதியதாக ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அப்படி ஒரு கடிதத்தை நான் எழுதவே இல்லை. இந்த கடிதத்தை யார் பரப்பினார்கள் என தேர்தல் ஆணையம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை