செவ்வாய் கிரகத்தில் வேற்று கிரகவாசிகள் பற்றிய புதிய தகவல்கள் வெளியீடு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

செவ்வாய் கிரகத்தில் வேற்று கிரகவாசிகள் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

செவ்வாய் கிரகம் ஒரு காலத்தில் மேம்பட்ட வேற்றுகிரவாசிகள் சமூகத்திற்கு இல்லமாக இருந்திருக்கலாம் என பல்வேறு வல்லுனர்கள் கூறி வருகின்றனர். இருப்பினும் நாசா உட்பட எந்த விண்வெளி அமைப்பும் இந்த சிவப்பு கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள் இருந்ததற்கான நம்பகமான தடயங்களை கண்டுபிடிப்பதில் வெற்றிபெறவில்லை. 

தற்போது ஹங்கேரிய ஆய்வாளர்களின் ஒரு குழு, அண்டார்டிகாவின் ஆலன் ஹில்ஸ் பிரிவில் இருக்கும் ஏ.எல்.எச்-77005 என பெயரிடப்பட்ட ஒரு செவ்வாய் விண்கல்லில், செவ்வாய் கிரகத்தில் வேற்று கிரகத்தின் இருந்ததற்கான தடயங்கள் இருக்கும் என்பதை வெளிப்படுத்தி உள்ளனர்.

ஓபன் ஆஸ்ட்ரானமி ஜேர்னலில் வெளியான இவர்களது ஆய்வு அறிக்கையானது, செவ்வாய் விண்கலத்தில் உள்ள பொருள், பூமியில் இரும்பு-ஆக்ஸிஜனேற்ற நுண்ணுயிர்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருளுடன் மிகவும் ஒத்துப்போகிறது என்ற உண்மையை வெளிப்படுத்தி உள்ளது.

"கிரகங்கள், பூமி, உயிரியல், இரசாயனம் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் என பலவற்றை ஒருங்கிணைப்பதாலும் மற்றும் பல துறைகளின் ஆராய்ச்சியாளர்கள் இதில் ஆர்வம் காட்டுவதாலும் எங்கள் ஆய்வு பரந்த பார்வையாளர்களுக்கு முக்கியமாக உள்ளது.

கிரக ஆராய்ச்சியாளர்கள், விண்கல் மற்றும் ஆஸ்ட்ரோபயாலஜி வல்லுநர்கள் மற்றும் மனிதகுல தோற்ற ஆராய்ச்சியாளர்கள் முதல் கற்களின் மயிரடுக்களில் உள்ள நுண்ணுயிரியல் ஊடகத்தின் அம்சத்தை விளக்குவதால் பொது மக்கள் வரை, எங்கள் ஆராய்ச்சியில் ஆர்வமாக உள்ளனர்" என்கிறார் வானியல் மற்றும் பூமி அறிவியல் எச்ஏஎஸ் ஆராய்ச்சி மைய அறிவியலாளரும், இந்த ஆராய்ச்சியின் முன்னணி ஆய்வாளருமான இல்டிகோ கொயோலை.

இந்த புதிய கண்டுபிடிப்பானது செவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள் பற்றிய மனிதர்களின் புரிதலில் புரட்சியை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் நம்புகின்றனர்.

இந்த ஏ.எல்.எச்- 77005 செவ்வாய் விண்கல் 1977 ஆம் ஆண்டில் ஜப்பானிய தேசிய துருவ ஆராய்ச்சி மைய திட்டத்தின் போது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விண்கற்கள் குறைந்தது 175 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று, இவை எரிமலை பாறைகளின் சேர்மானம் எனவும் நிபுணர்கள் நம்புகின்றனர்.

ஒரு சில வாரங்களுக்கு முன்பு, ஜேர்னல் ஆப் ஆஸ்ட்ரா பயாலஜி அன் ஸ்பேஸ் சயின்ஸ்-ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு அறிக்கையில், வேற்றுகிரகவாசிகள் அதன் துவக்கநிலையில் செவ்வாய் கிரகத்தில் வளர்ந்திருக்கலாம் என்று பரிந்துரைத்தது.நாசாவின் க்யூரியாசிடி ரோவர் மூலம் எடுக்கப்பட்ட பாசி, பூஞ்சை மற்றும் காளான்கள் போன்ற உயிரிகளின் 15 புகைப்படங்கள் அந்த ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்டது.

மூலக்கதை