சீனாவை விட இருமடங்கு வளரும் இந்தியாவின் மக்கள் தொகையும் வளர்ந்து வருகிறது- ஐ.நா.சபை அறிக்கையில் தகவல்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
சீனாவை விட இருமடங்கு வளரும் இந்தியாவின் மக்கள் தொகையும் வளர்ந்து வருகிறது ஐ.நா.சபை அறிக்கையில் தகவல்!

சீனாவை விட இருடமடங்கு வேகமாக வளரும் இந்தியாவின் மக்கள் தொகையும் வளர்ந்து வருவதாக ஐ.நா.சபை  தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா, அதற்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது. இந்த நிலையில், மக்கள் தொகை பெருக்கம் தொடர்பாக ஐ.நா. சபையின் மக்கள் தொகை நிதியகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. 

அதில், 1969ம் ஆண்டு, இந்தியாவின் மக்கள் தொகை 541.5 மில்லியனாக இருந்தது. 1994ல் இது, 942.2 மில்லியனாக அதிகரித்தது. தற்போது (2019) இந்திய மக்கள் தொகை 136 கோடி ஆகும். 2010-2019 ஆண்டுகள் இடையே இந்தியாவின் மக்கள் தொகை ஆண்டுக்கு 1.2 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து வருகிறது. 

சீனாவின் தற்போதைய மக்கள் தொகை 142 கோடி. 1994ல் இது 123 கோடியாக இருந்தது. 1969ல் 803.6 மில்லியனாக இருந்தது. 2010-2019 ஆண்டுகள் இடையே சீனாவின் மக்கள் தொகை ஆண்டுக்கு 0.5 சதவீதம் என்ற அளவுக்குத்தான் வளர்ந்து வந்துள்ளது. அதே நேரத்தில் இதே காலகட்டத்தில் இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் 1.2 சதவீதம். ஆக சீனாவை விட இரு மடங்குக்கும் அதிகமான வேகத்தில் இந்தியாவின் மக்கள் தொகை வேகமாக வளர்ந்து வருகிறது என கூறப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்ல, இந்தியாவில் மனிதர்களின் வாழ்நாள் நீடித்துக்கொண்டே வருகிறது. 1969ல் வாழ்நாள் என்பது 47 ஆண்டுகளாக இருந்தது. 1994ல் இது 60 ஆண்டுகள் என்ற அளவில் உயர்ந்தது. தற்போது அது 69 ஆண்டுகளாக அதிகரித்து உள்ளது. இது சாதனை அளவாக பார்க்கப்படுகிறது.

இது போன்ற பல  சுவாரசியமான தகவல்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மூலக்கதை