முதன் முறையாக வானில் பறந்து, வெற்றிகரமாக தரையிறங்கிய உலகின் மிகப்பெரிய விமானம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
முதன் முறையாக வானில் பறந்து, வெற்றிகரமாக தரையிறங்கிய உலகின் மிகப்பெரிய விமானம்!

முதன் முறையாக வானில் பறந்து,வெற்றிகரமாக தரையிறங்கிய உலகின் மிகப்பெரிய விமானம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

பால் ஆல்லென் என்பவர் வானத்தில் பறந்தவாறு ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தும் தொழில்நுட்பத்துடன் உலகின் மிகப்பெரிய விமானம் ஒன்றைத் தயாரிக்க முடிவு செய்தார்.

இதன் விளைவாக கடந்த 2011-ம் ஆண்டில் 'ஸ்டிராட்டோலான்ச்' என்ற புதிய நிறுவனத்தை பால் ஆல்லென் தொடங்கினார். விமானத்தின் வடிவமைப்பு, கட்டுமானப் பணிகள் முடிந்து சோதனை ஓட்டமாக அதனைப்  பறக்க விடுவதற்கு நாள் குறிக்கப்பட்டது.

அதன்படி, கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள மோஜாவே விமானம் மற்றும் விண்வெளி துறைமுகத்தில் இருந்து இந்த 'மெகா' விமானம் புறப்பட்டு சென்றது. மோஜாவே பாலைவனப் பகுதியில் 17 ஆயிரம் அடி உயரத்தில் மணிக்கு 189 மைல் வேகத்தில் சுமார் இரண்டரை மணிநேரம் வெற்றிகரமாக பறந்த இந்த விமானம் புறப்பட்ட இடத்தில் பத்திரமாக தரையிறங்கி புதிய சாதனையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விமானத்தில் ஆறு போயிங் 747 என்ஜின்கள் பொருத்தப்பட்டு உள்ளன.  இந்த விமானம் பறந்துகொண்டிருக்கும்போதே அதிலிருந்து விண்கலங்களை ஏவும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

விண்வெளியில் ராக்கெட்டுகளை வைத்திருப்பதற்கும், தேவைப்படும் போது விண்கலங்களை ஏவுவதற்கும் இந்த விமானம் பயன்படும்.  தற்போது நிலப்பரப்பிலிருந்து ராக்கெட்டுகள் ஏவப்படுகிறது. இந்த சோதனை வெற்றி பெற்றால், விண்ணில் இருந்து ராக்கெட்டுகள் ஏவப்படும்.இதனால் செலவும் மிச்சம் ஆகும்.

இந்த விமானம் மூலம் செயற்கைக்கோள்கள் ஏவுகணை ராக்கெட்டுகளின் உதவியுடன் விண்ணில் இருந்து ஏவப்படும்.விண்வெளியில் ராக்கெட்டுகளை வைத்திருப்பதற்கு இது சிறந்ததாக இருக்கும்.

இருவேறு விமானங்களை ஒருங்கே கொண்டது போன்று ஆறு இன்ஜின்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் இறக்கைகள் ஒரு கால்பந்து மைதானத்தை விட அதிகம். இறக்கைகளுக்கு இடையேயான தொலைவு மட்டும் 385 அடிகளாகும்

இந்த விமானம் முதல் பயணத்தில் சுமார் இரண்டரை மணி நேரம் பறந்தது. இது ஒரு சாதனையாகக் கருதப்படுகின்றது.

மூலக்கதை