வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும்- சென்னை வானிலை மையம் தகவல்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் சென்னை வானிலை மையம் தகவல்!

வெப்பச் சலனம் காரணமாக தென் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் எனசென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள் தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் உள்ளிட்ட இடங்களில் வெயில் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில் வானிலை மாற்றமடைந்து சில இடங்களில் கோடை மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மூலக்கதை