ஆஸ்திரேலியாவில் பரபரப்பு: உலகின் ஆபத்தான பறவை தாக்கியதில் முதியவர் பலி

தினகரன்  தினகரன்
ஆஸ்திரேலியாவில் பரபரப்பு: உலகின் ஆபத்தான பறவை தாக்கியதில் முதியவர் பலி

கான்பெர்ரா: ஆபத்தான பறவையை வளர்த்து வந்த 75 வயது முதியவர் அந்த பறவையால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஆஸ்திரேலியாவின் வடக்கு பிளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த மார்வின் ஹாஜோஸ் என்பவர் தனது பண்ணை வீட்டில் பல அரிய வகை பறவைகளை வளர்த்து வந்தார். அவற்றுள் உலகின் ஆபத்தான பறவை இனத்தை சேர்ந்த கசோவோரிஸ் (Cassowaries) என்ற பறவையையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், கசோவோரிஸ் பறவையால் மார்வின் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 5.6 அடி வரை வளரக்கூடிய பறக்க முடியாத இந்த பறவை இன்னும் அந்த பண்ணை வீட்டில் தான் இருக்கிறது என்று போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை