100 என்ன மாதிரியான கதை.?

தினமலர்  தினமலர்
100 என்ன மாதிரியான கதை.?

எல்லா ஹீரோக்களுக்குமே போலீஸ் கேரக்டரில் நடிக்க பிடிக்கும். அந்த வரிசையில் முதன் முறையாக 100 என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் அதர்வா. டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு மற்றும் கூர்கா படங்களை இயக்கிய சாம் ஆன்டன் இயக்கி உள்ளார். ஹன்சிகா ஹீரோயின். யோகி பாபு காமெடியன், மைம்கோபி வில்லன். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குனா சாம் ஆண்டன் கூறியதாவது:

போலீஸ் கதைகள் நிறைய வந்து விட்டது. ஆனால் இந்தப்படம் எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியான படம் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். காக்கி யூனிபார்ம் போட்டு ரோட்டில் கெத்து காட்டுகிற போலீஸ் கதையல்ல. இருக்கிற இடத்தில் இருந்து கொண்டு சிட்டியை ஆட்டிப்படைக்கிற கண்ட்ரோல் ரூமின் கதை. அவசரத்துக்கு 100க்கு போன் செய்கிறோம். அந்த 100 எப்படி வேலை செய்கிறது என்பது தான் கதை. ஒரு பிரச்சினை நடக்கிறது. அந்த பிரச்சினையை தீர்க்க கண்ட்ரோல் ரூம் எந்த அளவிற்கு உதவியாக இருக்கிறது என்பதை சொல்லும் படம். யாரும் இதுவரை தொடாத கதை.

போலீஸ் கண்ட்ரோல் ரூமில் பல நாள் உட்கார்ந்து அங்க நடப்பதை உள்வாங்கிக் கொண்டு எழுதப்பட்ட கதை. இளம் போலீஸ் அதிகாரியாக அதர்வா நடிக்கிறார். ஹன்சிகா கால் செண்டரில் வேலை செய்யும் பெண்ணாக நடித்திருக்கிறார். அதர்வா, ஹன்சிகா காதல் பிரஷ்சா, புதுசா இருக்கும். ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரு போலீஸ் படம் ஸ்பெஷலாக இருக்கம், இந்தப் படம் அதர்வாவுக்கு இருக்கும். என்கிறார் சாம் ஆண்டன்.

மூலக்கதை