ஹிந்தியில் கிளாமரில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங்

தினமலர்  தினமலர்
ஹிந்தியில் கிளாமரில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங்

தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங், தற்போது டீ டீ பியார் டீ என்ற படத்தில் அஜய் தேவகனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள வடி ஷரபான் என்ற பாடலின் வீடியோவை வெளியிட்டனர். நான்கு நாட்களிலேயே அந்தப் பாடல் 1 கோடியே 50 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.

அதற்கு ரகுல் ப்ரீத் சிங்கின் கிளாமரான ஆடையும், நடனமும் தான் காரணம் என்கிறது ரசிகர் வட்டாரம். அந்தப் பாடலில் ரகுல் புடவை அணிந்திருந்தாலும் அதை கிளாமராக அணிந்து ரசிகர்களைக் கவர முயற்சித்திருக்கிறார் என்கிறார்கள். அந்தப் பாடலின் ஸ்கிரீன்ஷாட் சிலவற்றை எடுத்து அதை சமூகவலைத்தளங்களில் சில ரசிகர்கள் பதிவிட்டு கமெண்ட் செய்து வருகிறார்கள்.

தமிழில் சூர்யா ஜோடியாக என்ஜிகே படத்தில் நடித்துள்ள ரகுல், சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

மூலக்கதை