ஒரு போஸ்ட்டும் இல்லை, ஆனால் 7.5 லட்சம் பாலோயர்ஸ்

தினமலர்  தினமலர்
ஒரு போஸ்ட்டும் இல்லை, ஆனால் 7.5 லட்சம் பாலோயர்ஸ்

'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்கள் வந்த பிறகு இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவராக மாறியவர் பிரபாஸ். தற்போது பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் 'சாஹோ' படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் பேஸ்புக்கில் இருக்கும் பிரபாஸ், சமீபத்தில் மற்றொரு சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கு ஒன்றை ஆரம்பித்தார். அதில் இன்னும் ஒரு பதிவைக் கூட அவர் பதிவிடவில்லை. ஆனால், அதற்குள் 7 லட்சத்து 55 ஆயிரம் பேர் அவரைத் தொடர ஆரம்பித்துவிட்டார்கள்.

பேஸ்புக்கில் பிரபாஸை 1 கோடி பேர் பின் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 'சாஹோ' படத்தின் பிரமோஷனுக்காகத்தான் இன்ஸ்டாகிராமிலும் பிரபாஸ் புதிய கணக்கை ஆரம்பித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

மூலக்கதை