மாமனார் நாகார்ஜுனா படத்தில் மருமகள் சமந்தா

தினமலர்  தினமலர்
மாமனார் நாகார்ஜுனா படத்தில் மருமகள் சமந்தா

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யாவை, காதல் திருமணம் செய்து கொண்டவர் நடிகை சமந்தா. திருமணத்திற்கு முன்பாகவே மாமனார் நாகார்ஜுனாவுடன் 'மனம்' படத்தில் நடித்தார். அடுத்து 'ராஜு காரிகதி 2' படத்தில் மீண்டும் நாகார்ஜுனாவுடன் நடித்தார்.

இப்போது மீண்டும் 'மன்மதடு 2' படத்தில் இணைந்து நடிக்க உள்ளார். இந்தப் படத்தை பாடகி சின்மயி கணவரும், நடிகருமான ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார். இவர்கள் சமந்தாவின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருப்பதால் அவர்களுக்காக நடிக்க சமந்தா சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

சிறப்புத் தோற்றமாக இருந்தாலும் படத்தில் கொஞ்ச நேரம் வரும் கதாபாத்திரமாக அது இருக்கும் என்கிறார்கள். சமந்தா கைவசம் தற்போது தமிழ்ப் படங்கள் எதுவுமில்லை. தெலுங்கில் 'ஓ பேபி' என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

மூலக்கதை