என்கவுன்டரில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை

தினகரன்  தினகரன்
என்கவுன்டரில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை

ராஞ்சி: ஜார்கண்டில் நடந்த என்கவுன்டரில் 3 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் சிஆர்பிஎப் வீரர் ஒருவரும் உயிரிழந்தார். ஜார்கண்டில் உள்ள கிரிதி மாவட்டத்தில் பெல்பா காட் வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக சிஆர்பிஎப் வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வீரர்கள் அந்த பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.  அப்போது  பதுங்கி இருந்த நக்சல்கள் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு வீரர்கள் கொடுத்த பதிலடியில் 3 நக்சல்கள் கொல்லப்பட்டனர். எனினும், இந்த சண்டையில் படுகாயமடைந்த சிஆர்பிஎப் வீரர் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவ இடத்தில் இருந்து ஏகே47 ரக துப்பாக்கி, பைப் குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

மூலக்கதை