பாலகோட்டில் துல்லியமான தாக்குதல்

தினகரன்  தினகரன்
பாலகோட்டில் துல்லியமான தாக்குதல்

புதுடெல்லி: ‘எதிர்க்கால வான்வெளி சக்தி மற்றும் தொழில்நுட்ப தாக்கம்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் தானோ கலந்து கொண்டு பேசுகையில், ‘‘பாலகோட் தாக்குதலில், நமது தொழில்நுட்பம் மிகச் சிறப்பாக இருந்தது. இலக்குகளை துல்லியமாக தாக்கினோம். அதன்பின் நடந்த தாக்குதல்களில், நாம் சிறப்பாக செயல்பட்டோம். இதற்கு மிக்-21 மைசன், மிராஜ் 2000 ரக விமானங்களின் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டதுதான் காரணம். விமானப்படையில் ரபேல் போர் விமானம் சரியான நேரத்தில் சேர்க்கப்பட்டிருந்தால், பாலகோட் தாக்குதலின் முடிவு இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்’’ என்றார்.

மூலக்கதை