கத்திப்பாரா மேம்பால சாலையில் ஆயில் கொட்டியதால் வாகனங்கள் சறுக்கி விபத்து

தினகரன்  தினகரன்
கத்திப்பாரா மேம்பால சாலையில் ஆயில் கொட்டியதால் வாகனங்கள் சறுக்கி விபத்து

ஆலந்தூர்: கத்திப்பாரா மேம்பால சாலையில் ஆயில் கொட்டியதால் வாகனங்கள் சறுக்கி ஒன்றோடு ஒன்று மோதியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டடது. கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து கிண்டி செல்லும் ஜி.எஸ்.டி சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், நேற்று அடையாளம் தெரியாத  வாகனத்தில் இருந்து கொட்டிய ஆயிலால் மேம்பாலத்தில் இருந்து  சென்ற இருசக்கர வாகனங்கள்  ஒன்றோடொன்று மோதி சரிந்து விழுந்த வண்ணம் இருந்தன.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த  பரங்கிமலை போக்குவரத்து போலீசார்  பொதுமக்கள் உதவியுடன் சாலையில் மணலை கொட்டி போக்குவரத்தை சீர் செய்தனர்.

மூலக்கதை