ஆவடி விமானப்படை தளத்தில் பயிற்சி மைய கமாண்டராக ஹர்திக் மோடி பொறுப்பேற்பு

தினகரன்  தினகரன்
ஆவடி விமானப்படை தளத்தில் பயிற்சி மைய கமாண்டராக ஹர்திக் மோடி பொறுப்பேற்பு

சென்னை: ஆவடி மெக்கானிக்கல் பயிற்சி மையத்தின் கமாண்டராக ஹர்திக் மோடி பொறுப்பேற்று ெகாண்டார். சென்னை ஆவடியில் உள்ள விமானப் படை தளத்தில் மெக்கானிக்கல் பயிற்சி மையத்தின்  கமாண்டராக ஹர்திக் மோடி நேற்று பொறுப்பேற்று கொண்டார். 1974 மார்ச் 6ம் தேதி குஜராத் மாநிலத்தில் பிறந்த இவர், எம்.எஸ்  பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். 1995ம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்ந்தார். மிக் - 27 ரக விமானத்தில் 13 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இதை தொடர்ந்து மூத்த பொறியாளர்,  தலைமை பொறியாளர் உள்ளிட்ட பதவிகளில் பணியாற்றியுள்ளார். தற்போது, சென்னை ஆவடி மெக்கானிக்கல் பயிற்சி மையத்தின் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

மூலக்கதை