ஒரு தடவ இல்லப்பு... 2 தடவ ஓட்டு போடுங்க...

தினகரன்  தினகரன்
ஒரு தடவ இல்லப்பு... 2 தடவ ஓட்டு போடுங்க...

மகாராஷ்டிராவில் பொதுமக்கள் இரண்டு முறை வாக்களிக்க வேண்டும் என்று கூறிய பாஜ எம்எல்ஏ மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை தொகுதியைச் சேர்ந்த பாஜ எம்எல்ஏ மாண்டா மஹாத்ரே. தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று பேசிய எம்எல்ஏ மாண்டா, ‘‘இங்கே வேலை செய்யும் சதாராவை சேர்ந்தவர்கள், உங்களது சொந்த  ஊருக்கு செல்லுங்கள். பாஜ, சிவசேனாவின் சாதாரா மக்களவை தொகுதி வேட்பாளர் நரேந்திர படேலுக்கு வாக்களியுங்கள். அங்கு இருந்து இங்கே மீண்டும் திரும்பி வாருங்கள். ஏப்ரல் 29ம் தேதி தானே தொகுதி சிவசேனா  வேட்பாளர் ரஞ்சன் விசாரேவுக்கு வாக்களியுங்கள்” என்று கூறினார். மக்களை 2 முறை வாக்களிக்கும்படி எம்எல்ஏ கூறியுள்ளது தேர்தல் நடத்தை விதி மீறல் என்பதால் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மூலக்கதை