ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் வார்னர், ஸ்மித்

தினகரன்  தினகரன்
ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் வார்னர், ஸ்மித்

மெல்போர்ன்: உலக கோப்பையில் விளையாட உள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பந்தை சேதப்படுத்திய பிரச்னையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள்  டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.தடை முடிந்த நிலையில் இருவரும் ஐபிஎல் தொடரில் விளையாடி  வருகின்றனர். இந்நிலையில் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள ஆஸ்திரேலியா அணியில் இருவரும் மீண்டும் இடம் பிடித்துள்ளனர்.அதே நேரத்தில் அணியில் இடம் பிடிப்பார்கள் எதிர்பார்க்கப்பட்ட   ஜோஸ் ஹசல்வுட், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகியோருக்கு  அணியில் இடம் கிடைக்கவில்லை.உலக கோப்பையில் விளையாட உள்ள ஆஸ்திரேலியா அணிக்கான பயிற்சி முகாம்  மே.2ம் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. பயிற்சியின் ஒருப்பகுதியாக நியூசிலாந்துடன் 3 பயிற்சி ஆட்டங்களில்  ஆஸ்திரேலியா  விளையாட உள்ளது.ஆஸ்திரேலியா அணி: ஆரோன் பிஞ்ச்(கேப்டன்), உஸ்மான் கவாஜா,  டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித்,  ஷான் மார்ஷ்,  கிளவுன் மாக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டொயின்ஸ், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல்  ஸ்டார்க்,  ஜயே ரிச்சர்ட்சன்,  நாதன் கவுல்டர் நைல், ஜாசன் பெஹ்ரென்டோர்ப், நாதன் லயன், ஆடம் ஸம்பா.

மூலக்கதை