மொத்த விலை பணவீக்கம் 3.18 சதவீதமாக அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
மொத்த விலை பணவீக்கம் 3.18 சதவீதமாக அதிகரிப்பு

புதுடில்லி:கடந்த மார்ச்சில், நாட்டின் மொத்த விலை பணவீக்கம், 3.18 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, பிப்ரவரியில், 2.93 சதவீதம்; கடந்த ஆண்டு மார்ச்சில், 2.74 சதவீதமாக காணப்பட்டது.எரிபொருள், காய்கறிகள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வால், மொத்த விலை பணவீக்கம், தொடர்ந்து இரண்டாவது மாதமாக அதிகரித்துள்ளது.


மார்ச்சில், காய்கறிகள் பணவீக்கம், 28.13 சதவீதமாக இருந்தது. இது, பிப்ரவரியில், 6.82 சதவீதமாக குறைந்து காணப்பட்டது.அதேசமயம், இதே காலத்தில், உருளைக்கிழங்கின் மொத்த விலை பணவீக்கம், 23.40 சதவீதத்தில் இருந்து, 1.30 சதவீதமாக குறைந்துள்ளது.


எரிபொருள் மற்றும் மின்சார பணவீக்கம், 2.23 சதவீதத்தில் இருந்து, 5.41 சதவீதமாக உயர்ந்துள்ளது.மார்ச்சில், உணவுப் பொருட்கள் மொத்த விலை பணவீக்கம், 5.68 சதவீதமாக அதிகரித்துள்ளது.கடந்த மார்ச்சில், சில்லரை விலை பணவீக்கம், 2.86 சதவீதமாக இருந்தது. இது, பிப்ரவரியில், 2.57 சதவீதமாக காணப்பட்டது.


நடப்பு நிதியாண்டில், ஏப்., – செப்., வரையிலான காலத்தில், சில்லரை பணவீக்கம், 2.9 – 3 சதவீதமாக இருக்கும் என, ரிசர்வ் வங்கி மதிப்பீடு செய்துள்ளது.ரிசர்வ் வங்கி, சில்லரை விலை பணவீக்க அடிப்படையில், நிதிக் கொள்கையை உருவாக்குகிறது.

மூலக்கதை