இசையமைப்பாளருக்கு மோகன்லால் கொடுத்த பரிசு

தினமலர்  தினமலர்
இசையமைப்பாளருக்கு மோகன்லால் கொடுத்த பரிசு

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் 'தீவண்டி' என்கிற படம் வெளியாகியிருந்தது. ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இந்த படத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு கைலாஷ் மேனன் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருந்தார். படத்தின் பின்னணி இசையும் இரண்டு பாடல்களும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தன. இந்த நிலையில் இவருக்கு எதிர்பாராத ஜாக்பாட்டாக மோகன்லால் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆம்.. மோகன்லால் அடுத்ததாக நடிக்க உள்ள 'இட்டிமானி மேட் இன் சைனா' என்கிற படத்திற்கு கைலாஷ் மேனன் தான் இசையமைக்கிறார். தனது திரையுலக பயணத்தில் இவ்வளவு சீக்கிரமே மோகன்லால் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்த ஆச்சரியம் இன்னும் விலாகத நிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் கைலாஷ் மேனன்.

தீவண்டி படத்தை பார்த்துவிட்டு, தனது படத்தின் இயக்குனர்களான ஜிபி மற்றும் ஜோஜூவிடம் கைலாஷ் மேனனை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்ய சொன்னதே மோகன்லால் தானாம். இந்த படத்தை மோகன்லாலின் சொந்த நிறுவனமான ஆசிர்வாத் சினிமாஸ் தான் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை