ஓய்வுபெற்ற ராணுவ வீரராக நடிக்கும் பிரித்விராஜ்

தினமலர்  தினமலர்
ஓய்வுபெற்ற ராணுவ வீரராக நடிக்கும் பிரித்விராஜ்

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் 'அனார்கலி' என்கிற படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் பிரித்விராஜுடன் இன்னொரு கதாநாயகனாக நடிகர் பிஜுமேனனும் இணைந்து நடித்திருந்தார். மலையாள திரையுலகின் பிரபல கதாசிரியரான சாச்சி இந்த படத்தை இயக்கியிருந்தார்.

தற்போது சிறிய இடைவெளிக்கு பிறகு சாட்சி தனது அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார். இந்த படத்திலும் பிரித்விராஜும், பிஜுமேனனும் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இதில் பிருத்விராஜ் ஓய்வு பெற்ற ராணுவ வீரராக நடிக்கிறார்.

பிஜூமேனன் ஒரு கிராமத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிள் வேலை பார்ப்பவராக நடிக்கிறார். இந்த கிராமத்திற்கு ஓய்வுபெற்ற பிரித்விராஜ் வந்தபின்னர் இவர்கள் இருவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் தான் மொத்த படத்தின் கதையாம். இதை நகைச்சுவை பின்னணியில் சொல்கிறாராம் இயக்குனர் சாச்சி..

மூலக்கதை