உண்மையைப் போட்டு உடைத்த தயாரிப்பாளரின் அப்பா

தினமலர்  தினமலர்
உண்மையைப் போட்டு உடைத்த தயாரிப்பாளரின் அப்பா

குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கிய இயக்குனர் ராஜுமுருகனின் அண்ணன் சரவண ராஜேந்திரன் இயக்கியுள்ள படம் 'மெஹந்தி சர்க்கஸ்'. 'ஸ்டூடியோ கிரீன்' கே.ஈ.ஞானவேல்ராஜா பேனரில் வெளியாகிறது.

மாதம்பட்டி ரங்கராஜ் கதாநாயகனாகவும், ஸ்வேதா த்ரிபாதி கதாநாயகியாகவும் நடித்துள்ள 'மெஹந்தி சர்க்கஸ்' படம் இம்மாதம் 19-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தின் கதை வசனத்தை ராஜுமுருகன் எழுதியுள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஞானவேல்ராஜாவின் அப்பா ஈஸ்வரன், வெள்ளாந்தியாக பேசுவதாக நினைத்துக் கொண்டு, மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் கதையை ராஜுமுருகன் எழுதவில்லை. டைரக்டரே தான் எழுதியிருக்கிறார். ராஜுமுருகன் பெயரைப்போட்டால் படத்துக்கு ப்ளஸ்ஸாக இருக்கும் என்பதால் அவருடைய பெயரை கதை வசனம் என்று போட்டிருக்கிறோம் என்று உண்மையைப்போட்டு உடைத்தார்.

அவர் பேசியதைக் கேட்டதும் மேடையில் இருந்த படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துவிட்டனர். முக்கியமாக ராஜுமுருகன் தலையில் கையைவைத்து குனிந்துவிட்டார்.

மூலக்கதை