காப்பான் படத்தில் மோகன்லாலுக்கு மோடி கெட்டப்

தினமலர்  தினமலர்
காப்பான் படத்தில் மோகன்லாலுக்கு மோடி கெட்டப்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் என்ஜிகே படம் மே 31-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் 'தண்டல்காரன்...' என்று துவங்கும் சிங்கிள் டிராக் அண்மையில் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து சூர்யா நடிக்கும் மற்றொரு படமான 'காப்பான்' படத்தின் டீசரை 'தமிழ் புத்தாண்டன்று வெளியிட்டுள்ளனர். காப்பான் டீசரைப் பார்க்ம்போது அப்படம் குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்ட செய்தி உறுதியாகியுள்ளது.

அதாவது காப்பான் படத்தில் மோகன்லால் பிரதமராகவும், அவரது மகனாக ஆர்யாவும், பிரதமருக்கு பாதுகாப்பு தரும் அதிகாரியாக சூர்யா நடிக்கிறார் என்றும் செய்தி வெளியிட்டோம்.

காப்பான் படத்தில் பிரதமராக நடிக்கும் மோகன்லாலுக்கு மோடியைப்போல் கெட்டப்பை வடிமைத்துள்ளனர். அது மட்டுமல்ல காப்பான் படத்தில் சூர்யா பல்வேறு கெட்டப்புகளில் நடித்திருப்பதையும் உறுதி செய்துள்ளது அப்படத்தின் டீசர்.

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 10 அன்று வெளியாக இருப்பதால் 20 நாட்கள் கழித்து காப்பான் படத்தை வெளியிடுகின்றனர்.

மூலக்கதை