விஜய்தேவரகொண்டா படத்தில் வாணி போஜன்

தினமலர்  தினமலர்
விஜய்தேவரகொண்டா படத்தில் வாணி போஜன்

சின்னத்திரையில் பிரபலமாகி சினிமாவுக்கு வந்த பிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து தற்போது இன்னொரு சின்னத்திரை பிரபலமான வாணி போஜனும் சினிமாவுக்கு வந்துள்ளார். பிரியா பவானி சங்கர் மேயாதமான் படத்தில் வைபவிற்கு ஜோடியாக நடித்தது போன்று, இவரும் அதே வைபவ் ஜோடியாக சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் நடித்து வரும்போதே, தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் படத்திலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் வாணி போஜன். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த பெல்லி சூப்புடு என்ற படத்தை இயக்கிய தரண் பாஸ்கர் ஹீரோவாக நடிக்கிறார். சமீர் என்ற தமிழ் குறும்பட இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார். ஆக, ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் அறிமுகமாகிறார் வாணி போஜன்.

மூலக்கதை