அஜித் ரசிகர்களிடம் சிக்கிய கார்த்திக் சுப்பராஜ்

தினமலர்  தினமலர்
அஜித் ரசிகர்களிடம் சிக்கிய கார்த்திக் சுப்பராஜ்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் கடந்த பொங்கலுக்கு வெளியானது. அப்படம் நேற்று ஒரு தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிலையில் நேற்று சென்னை மற்றும் கோல்கட்ட அணிகளுக்கிடையே பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியும் நடைபெற்றது.

அதுகுறித்து தனது டுவிட்டரில், தலைவர் மற்றும் தல ஆட்டம் ஒரே நேரத்தில் தொலைக்காட்சியில் நடந்து வருகிறது. தலைவரும், தலயும் என்றென்றும் மறக்க முடியாதவர்கள் என்று ஒரு செய்தி பதிவிட்டிருந்தார் கார்த்திக் சுப்பராஜ்.

இதையடுத்து மீண்டும் பேட்ட, விஸ்வாசம் வசூலை ஒப்பிட்டு யார் சிறந்தவர்கள் என பட்டியலிட்டு வருகிறார்கள். அதோடு சிலர் ரசிகர்கள் வரம்பு மீறி ஆபாசமான பதிவுகளை பதிவிட்டு கார்த்திக் சுப்பராஜை வசைபாடி வருகின்றனர்.

மூலக்கதை