சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த 5 ஹீரோக்கள்

தினமலர்  தினமலர்
சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த 5 ஹீரோக்கள்

வேலைக்காரன் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் - நயன்தாரா இணைந்துள்ள படம் மிஸ்டர் லோக்கல். இவர்களுடன் ராதிகா, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை, ராஜேஷ்.எம் இயக்கியுள்ளார். மே 1-ந்தேதி உழைப்பாளர் தினத்தில் படம் திரைக்கு வருகிறது. ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், மிஸ்டர் லோக்கல் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோவை ஏப்ரல் 20-ந்தேதி வெளியிடுகிறார்கள். இந்த படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்கள்.

மூலக்கதை