‘என் பாட்டியும் சுஷ்மிதாவும் ஒண்ணு’ அசாம் பிரசாரத்தில் பிரியங்கா உற்சாகம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘என் பாட்டியும் சுஷ்மிதாவும் ஒண்ணு’ அசாம் பிரசாரத்தில் பிரியங்கா உற்சாகம்

அசாம் மாநிலம், சில்சாரில் காங்கிரஸ் வேட்பாளரும், எம்பியுமான சுஷ்மிதா தேவ்வை ஆதரித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா பேசியதாவது: மத்திய பாஜ அரசு அரசியலமைப்பு சட்டத்துக்கு எந்த மரியாதையும் அளிப்பதில்லை. அதை அழிப்பதற்கு முயற்சி நடக்கிறது.

மக்களவைத் தேர்தலுக்கான பாஜ தேர்தல் அறிக்கையில், பல்வேறு கலாசாரங்கள், மதங்களுக்கு இடமளிக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் அமெரிக்கா, சீனா, ரஷியா, ஆப்பிரிக்கா நாடுகளுக்கு சென்று, அங்கெல்லாம் அந்த நாட்டுத் தலைவர்களை கட்டித் தழுவினார்.

ஜப்பானுக்கு சென்று மேளதாள கருவியை கொட்டினார். பாகிஸ்தானுக்கு சென்று பிரியாணி சாப்பிட்டார்.

ஆனால், தமது சொந்த வாரணாசி தொகுதியில், ஒரு வீட்டுக்கு கூட சென்று, அவர்களது நிலையை கேட்டறியவில்லை. காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் சுஷ்மிதா தேவ், எனது பாட்டியும், மறைந்த பிரதமருமான இந்திரா காந்தி போன்றவர்.

இந்திரா காந்தியை போன்ற துணிச்சல் கொண்டவர் சுஷ்மிதா தேவ், நேர்மையானவர் மற்றும் நல்ல எண்ணம் கொண்டவர்.

இவ்வாறு அவர் பேசினார்.

.

மூலக்கதை