தெலங்கானா மாநிலத்தில் ஓட்டுப்பெட்டி அறையில் ‘போட்டோ’: டி.ஆர்.எஸ். முகவர் அதிரடி கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
தெலங்கானா மாநிலத்தில் ஓட்டுப்பெட்டி அறையில் ‘போட்டோ’: டி.ஆர்.எஸ். முகவர் அதிரடி கைது

தெலுங்கானா மாநிலத்தில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் புகைப்படம் எடுத்துக் கொண்ட, ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் முகவர் கைது செய்யப்பட்டார். மக்களவைக்கு முதற்கட்டமாக கடந்த 11ம் தேதி 18 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதேபோல், தெலுங்கானாவில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்து, அன்று மாலை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு அறைகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டன. முன்னதாக, மல்காஜ்கிரி மக்களவைத் தொகுதியில், அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர் மாரி ராஜசேகர் ரெட்டிக்கு முகவராக உள்ள வெங்கடேஷ் என்பவர், வாக்குப்பதிவு முடிந்த அன்று உரிய அனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் நின்று புகைப்படம் எடுத்துள்ளார்.

அந்த புகைப்படத்தை அவரது நண்பர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கிவிட்டனர்.

இந்நிலையில், தேர்தல் அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வெங்கடேஷை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

.

மூலக்கதை