அரசியல் எதிரிகளை திட்டுவதில்லை: மோடிக்கு மெகபூபா முப்தி பதிலடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
அரசியல் எதிரிகளை திட்டுவதில்லை: மோடிக்கு மெகபூபா முப்தி பதிலடி

காஷ்மீரில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர்கள் அப்துல்லா குடும்பத்தையும், முப்தி குடும்பத்தையும் விமர்சித்து பேசினார். அதற்கு முப்தி முகமது சயீதின் மகளும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, ‘‘நான் அனுதாபம் தேடி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக, அரசியல் எதிரிகளை திட்டுவதில்லை. ஆனால், பிரதமர் மோடியோ அனுதாபம் தேடும் நோக்கத்தில், தன்னை தேசத்துடன் சமப்படுத்தி பேசுகிறார்.

மோடிதான் இந்தியா அல்ல, இந்தியாதான் மோடியும் அல்ல’’ என்று தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை