அம்பேத்கர் பிறந்த தினம் உத்திரமேரூரில் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அம்பேத்கர் பிறந்த தினம் உத்திரமேரூரில் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

உத்திமேரூர்: உத்திரமேரூர் ஒன்றிய, நகர இந்திய குடியரசு கட்சி சார்பில் அம்பேத்கரின் 128வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தலைவர் காஞ்சி என். சம்பத் தலைமையில் ஏராளமானோர், மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் பஜார் வீதி, சன்னதி தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று உத்திரமேரூர்- செங்கல்பட்டு சாலையில் உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து உத்திரமேரூர், அழிசூர், மேல்பாக்கம், களியாம்பூண்டி ஆகிய கிராமங்களில் 2 ஆயிரம் ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்கி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் அழிசூர் எம். ராதாகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் கோபால், மாவட்ட துணை செயலாளர் சித்திரை, உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் புரட்சி என். ஏ. தியாகராஜன், மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிகண்டன், துணை செயலாளர் சதாசிவம், நகர தலைவர் மாணிக்கம், இளைஞரணி நிர்வாகி சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

.

மூலக்கதை