மீஞ்சூரில் துணை ராணுவம் அணிவகுப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மீஞ்சூரில் துணை ராணுவம் அணிவகுப்பு

பொன்னேரி: மீஞ்சூரில் நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 200க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் நேற்று மீஞ்சூரில் அடையாள அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.

இவர்கள், பொன்னேரி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் தலைமையில், மீஞ்சூரில் இருந்து அத்திப்பட்டு வரை பேண்டு வாத்தியங்கள் முழங்க, துணை ராணுவத்தினர் முக்கிய வீதி வழியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது பொதுமக்கள், அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது’ என்று அறிவித்தனர்.

இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், பால்ராஜ், ராமமூர்த்தி, வடிவேல்முருகன் மற்றும் ஏராளமான போலீசார் பங்கேற்றனர்.

.

மூலக்கதை