விஜயகாந்த் இன்று சென்னையில் பிரசாரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
விஜயகாந்த் இன்று சென்னையில் பிரசாரம்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஒரு மாதத்துக்கு மேலாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். தற்போது ஓய்வில் இருக்கும் அவர் பிரசாரத்துக்கு வரமாட்டார் என்றே தேமுதிக தரப்பில் பேசப்பட்டது.

டாக்டர்கள் அவரை பிரசார மேடைக்கு அழைத்து செல்லக்கூடாது என்று அறிவுறுத்தியதாக கூறப்பட்டது. இதனால் பிரேமலதா மட்டும் தேமுதிக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார்.   இந்நிலையில், இன்று மாலை சென்னைக்குட்பட்ட பகுதிகளில் அவர் பிரசாரம் செய்ய உள்ளதாக தேமுதிக தலைமை அறிவித்தது.

இதனால் விஜயகாந்த் இன்று மாலை பிரசாரத்துக்கு வருவது உறுதியாகிவிட்டது.

குறிப்பாக, வடசென்னை தொகுதியில் தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்து அவர் பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி இன்று மாலை 4 மணிக்கு வில்லிவாக்கம், கொளத்தூர், பெரம்பூர், திரு. வி. க. நகர், ராயபுரம், திருவொற்றியூர், ஆர். கே. நகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்வதோடு மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் பேசுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தேமுதிக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

.

மூலக்கதை