சூடு, சொரணை இல்லாத பாஜ: நாராயணசாமி தாக்கு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சூடு, சொரணை இல்லாத பாஜ: நாராயணசாமி தாக்கு

புதுச்சேரி: புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து முதல்வர் நாராயணசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று மாலை லாஸ்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திறந்த வேனில் நின்றபடி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: புதுச்சேரி அரசுக்கு தொல்லை கொடுக்கவென்றே மத்திய அரசு கிரண்பேடியை கவர்னராக நியமித்திருக்கிறது.

இந்திய வரலாற்றில் மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் நியமன எம்எல்ஏக்களை கொல்லைப்புறமாக மத்திய அரசு நியமித்திருக்கிறது. இதற்காக அனுப்பப்பட்ட கடிதத்தில் சரியான முகவரி கூட இல்லை.

இதனால் இதை அங்கீகரிக்க முடியாது என சபாநாயகர் வைத்திலிங்கம் நிராகரித்தார்.

ஆனால் ராஜ்நிவாசின் கதவை மூடிக்கொண்டு ரகசியமாக நியமன எம்எல்ஏக்களுக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ஆனால் அவ்வாறு பதவியேற்றுக் கொண்ட நியமன எம்எல்ஏக்கள் சட்டசபையில் என்ன செய்தார்கள்? என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் செல்லும் பிரசார வேனில் பாஜக கொடியில்லை. பிரதமர் மோடியின் படம் இல்லை. இவற்றை பயன்படுத்தினால் மாற்று மதங்களின் வாக்குகள் கிடைக்காது என இவ்வாறு செய்கிறார்கள்.

இதுவொரு விசித்திரமான கூட்டணியாக இருக்கிறது. பாஜகவுக்கு சூடு, சொரணை இருந்தால் என்ஆர் காங்கிரசுடன் நாங்கள் கூட்டணியில் இல்லையென்று அறிவிக்க வேண்டும்.

பிரதமர் மோடியால் நாடு சீரழிந்து விட்டது. இதனால் ராகுல் பிரதமர் ஆகவேண்டும் என்று விரும்புகிறார்கள், அது நடக்கும்.


.

மூலக்கதை