ஜிஎஸ்டியால் சிறுகுறு வியாபாரிகளை அழித்த மோடி ஆட்சியை தூக்கி எறியுங்கள்: மு.க.ஸ்டாலின் ஆவேசம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜிஎஸ்டியால் சிறுகுறு வியாபாரிகளை அழித்த மோடி ஆட்சியை தூக்கி எறியுங்கள்: மு.க.ஸ்டாலின் ஆவேசம்

திருப்போரூர்: ஜிஎஸ்டியால் சிறுகுறு வியாபாரிகளை அழித்த கேடு கெட்ட மோடி ஆட்சியை தூக்கி எறியுங்கள் என்று மாம்பாக்கத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் மு. க. ஸ்டாலின் பேசினார். காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வம், திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் இதயவர்மன் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் மு. க. ஸ்டாலின், காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கம், நெல்லிக்குப்பம், கொட்டமேடு, திருப்போரூர், பையனூர், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் இன்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அவருக்கு ஏராளமான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரசாரத்தின்போது மு. க. ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிரதமர் மோடி, நாட்டுக்கு செய்த கொடுமைகள், அக்கிரமங்கள் ஏராளம்.

அவர் நடத்திய சர்வாதிகார ஆட்சியில் ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இதனால் வங்கி வாசலில் நின்று இறந்தவர்கள் 150யை தாண்டும். கருப்பு பணத்தை ஒழித்து, அதை மீட்டு, நமது வங்கி கணக்கில் ரூ. 15 லட்சம் போடுவதாக பொய் வாக்குறுதி கொடுத்தார்.

ஆனால், 15 ரூபாய் அல்ல. 15 பைசா கூட போடவில்லை.

திருடனை நேரடியாக பிடித்து தண்டிப்பதற்கு பதிலாக, நல்ல நோட்டு வைத்திருந்த நம்மை போன்ற ஏழை மக்களை தண்டித்தார். இவரது ஆட்சியில் எல்லாமே வரும்.

ஆனால் வராது. .

ஜிஎஸ்டி வரி என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி, ஏழைகள், விவசாயிகள், வியாபாரிகள், சிறுகுறு தொழில்களை செய்வோர், பொதுமக்கள் ஆகியோரை அழித்தார். ஒரு வருடத்துக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை தருவதாக உறுதியளித்து, ஒருவருக்குகூட வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதுபோன்ற கேடு கெட்ட ஆட்சியை தூக்கி எறிய இந்த தேர்தலை நீங்கள் பயன்படுத்த வேண்டும். நமது கட்சியில் உள்ள கூட்டணி, கொள்கை அடிப்படையில் அமைத்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி, இப்போது தேர்தலுக்காக அணி அமைத்திருக்கிறோம்.

ஆனால், எதிரே அமைந்திருக்கிற மற்றொரு கூட்டணி கொள்கை அடிப்படையில் அமைந்த கூட்டணி அல்ல. கொள்ளை அடிப்பதற்காக உருவாகியுள்ள கூட்டணி.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால்,

 முதல்வரை பார்த்து, அறிவே இல்லாத முதல்வர், என்று ெசான்ன அன்புமணி, இப்போது அந்த கூட்டணியில் இருக்கிறார். (அப்போது, பொதுமக்கள் டயர் நக்கி, டயர் நக்கி என்றனர். ) அந்த வார்த்தையை என் வாயால் நான் சொல்ல மாட்டேன்.

அதை அன்புமணிதான் சொல்வார்.
திமுக ஆட்சி அமைந்ததும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும். விவசாய, கல்வி கடன் ரத்து செய்யப்படும்.

5 பவுன் வரை கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த நகைக்கடன் ரத்து செய்யப்படும். இப்படி நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறோம்.

அதிமுகவும், ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதிலும் நீட் தேர்வு ரத்து என வாக்குறுதி கொடுத்துள்ளனர்.

ஆனால் நேற்று, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது, அதிமுகவும் அதுபற்றி எங்களிடம் பேசவில்லை’ என்ற உண்மையை போட்டு உடைத்து விட்டார்.

8 வழி சாலையை ரத்து செய்து நீதிமன்றமே தீர்ப்பு கூறிய பிறகும், நேற்று வந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ‘கண்டிப்பாக 8 வழி சாலை திட்டம் நிைறவேற்றப்படும்’ என்று சொல்கிறார். ஆகவே அதிமுக விநியோகித்து வரும் ரூ. 2 ஆயிரத்தை நீங்கள் வாங்கி கொள்ளுங்கள்.

ரூ. 20 ஆயிரம் கூட கேளுங்கள். அவர்கள் கொள்ளையடித்து வைத்துள்ள பணத்துக்கு ரூ. 2 லட்சம் வரைகூட ெகாடுக்கலாம்.

ஆகவே அந்த பணம் நம்முடைய பணம். மக்கள் பணம்.

எவ்வளவு கொடுத்தாலும் வாங்கி கொண்டு, நல்லாட்சி மலர, திமுகவுக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

.

மூலக்கதை