எனது கனவு நனவாகியுள்ளது: கீமோ பால் மகிழ்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
எனது கனவு நனவாகியுள்ளது: கீமோ பால் மகிழ்ச்சி

டெல்லி: எனது கனவு நனவாகியுள்ளது என்று ஆட்ட நாயகனாக தேர்வான டெல்லி அணி வீரர் கீமோ பால் தெரிவித்துள்ளார். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் டெல்லியில் நேற்று நடந்த போட்டியில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத்-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. மர்லின் மன்றோ 40 ரன்கள், ஸ்ரேயாஸ் 45 ரன்கள் எடுத்தனர்.

156 ரன்கள் என்ற இலக்குடன் பேட்டிங்கை துவக்கிய சன் ரைசர்ஸ் அணியின் ஓபனர்கள் டேவிட் வார்னர் 51 ரன்கள், பியர்ஸ்டோ 41 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.

இதனால் 18. 5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, ஹைதராபாத் அணி 116 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் டெல்லி அணி 39 ரன்களில் வெற்றி பெற்றது.



டெல்லி பவுலர் கீமோ பால் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து, 3 விக்கெட்களை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதுக்கு தேர்வானார். கீமோ பால் கூறுகையில், ‘‘முதலில் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

ஆட்ட நாயகனாக தேர்வானதன் மூலம் எனது கனவு நனவாகியுள்ளது. எனது குடும்பத்தினர், எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தனர்.

ஐபிஎல் டி20 போட்டி உலகளவில் பெரிய போட்டி. இந்த போட்டியை நான் ரசித்து விளையாடுகிறேன்.

விக்கெட்டுகளை வீழ்த்துவதிலேயே நான் குறியாக இருந்தேன். இனி வரும் போட்டிகளில், பேட்டிங்கிலும் பங்களிக்க விரும்புகிறேன்.

ஆட்ட நாயகன் விருதை எனது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அணியினருக்கு சமர்ப்பிக்கிறேன். அனைவரின் ஒத்துழைப்புக்கும் நன்றி’’ என்று தெரிவித்தார்.

டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறுகையில், ‘‘அனைவரும் ஒன்றிணைந்து, தோழமை உணர்வுடன் விளையாடினோம். கீமோ பால் மற்றும் அக்ஸர் படேல் நன்றாக பந்து வீசினர்’’ என்று தெரிவித்தார்.



சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி: கொல்கத்தாவில் நேற்று நடந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ேமாதின. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது.

ஓபனராக களமிறங்கிய கிறிஸ் லின் 51 பந்துகளில், 82 ரன்கள்(7 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

சென்னை அணியின் தாஹிர் 4 விக்கெட்கள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதுக்கு ேதர்வானார்.

சென்னை அணி, 19. 4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சுரேஷ் ரெய்னா 58 ரன்கள்(42 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), ரவீந்திர ஜடேஜா 31 ரன்கள்(17 பந்து, 5 பவுண்டரி) எடுத்தனர்.

சென்னை அணி இத்தொடரில் 8 போட்டிகளில் ஆடி, அவற்றில் 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

14 புள்ளிகளுடன் தொடர்ந்து பட்டியலில் முன்னிலையில் உள்ளது.  

.

மூலக்கதை