உலகக்கோப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலிய அணியில் வார்னர், ஸ்மித்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உலகக்கோப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலிய அணியில் வார்னர், ஸ்மித்

சிட்னி: ஐசிசி ஒருநாள் போட்டி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில்  டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் மீண்டும்  இடம் பெற்றுள்ளனர். ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடருக்கான  அணிகளை வரும் 23ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான 15 வீரர்கள் அடங்கிய ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது.

ஓராண்டு தடை காரணமாக ஆஸி. அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்த டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

 அதே வேளையில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் ஆகியோர் உலகக்கோப்பைக்கான ஆஸி.

அணியில் இடம் பெறவில்லை. ஆஸி.

அணி தேர்வுக்குழு தலைவர் ட்ரெவர் ஹான்ஸ் கூறுகையில், ‘‘வார்னரும், ஸ்மித்தும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். தற்போது ஐபிஎல் தொடரில் இருவருமே சிறப்பாக ஆடி வருகிறார்கள்.

மீண்டும் அவர்கள் ஆஸி. அணியில் இடம் பிடித்துள்ளனர் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியா மற்றும் அராப் எமிரேட்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஆஷ்டன் டர்னர், ஜோஷ் ஹேசல்வுட் மற்றும் கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் இங்கிலாந்து பயணத்திற்கான ஆஸ்திரேலியா ஏ அணியில் இடம் பெற்றுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளார்.ஆரோன் பின்ச் தலைமையிலான உலகக்கோப்பைக்கான ஆஸி. அணியில் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜைய் ரிச்சர்ட்சன், நாதன் கோட்லர் நைல் மற்றும் ஜேசன் பெஹரெண்டார்ப் என 5 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

நாதன் லியான் மற்றும் ஆடம் ஜாம்பா ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்களாக இடம் பிடித்துள்ளனர். உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள ஆஸி.

வீரர்கள்  மே 2ம் தேதி முதல் பிரிஸ்பேனில் உள்ள  நேஷனல் கிரிக்கெட் சென்டர் மைதானத்தில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட உள்ளனர். மேலும் ஒரு சில பயிற்சி ஆட்டங்களிலும் அவர்கள் ஆட உள்ளனர் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.ஐசிசி உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி; ஆரோன் பின்ச் (கேப்டன்), ஜேசன் பெஹரெண்டார்ப், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), நாதன் கோட்லர் நைல், பாட் கம்மின்ஸ், உஸ்மான் கவாஜா, நாதன் லியான், ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜைய் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர் மற்றும் ஆடம் ஜாம்பா.

.

மூலக்கதை