பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாமில் நடால் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது: கார்லோஸ் மோயா பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாமில் நடால் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது: கார்லோஸ் மோயா பேட்டி

பார்சிலோனா: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் ஆடவர் ஒற்றையர் போட்டிகளில் ரஃபேல் நடாலின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என முன்னாள் நம்பர் 1 வீரர் கார்லோஸ் மோயா தெரிவித்துள்ளார். ஸ்பெயினின் முன்னாள் டென்னிஸ் நட்சத்திரம் கார்லோஸ் மோயா, தற்போது ரஃபேல் நடாலுக்கு பயிற்சியாளராக உள்ளார்.

அவர் கூறுகையில், ‘‘1998ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்ற அந்த தருணங்களை நினைவு கூர்கிறேன். அதற்கு முந்தைய ஆண்டு ஆஸி.

ஓபன் பைனலில் பீட் சாம்ப்ராசை எதிர்த்து ஆடினேன். அதில் கிடைத்த அனுபவம்தான் 1998ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வெல்ல உதவியது.பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றயைர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ரஃபேல் நடால் 11 முறை வென்றுள்ளார். அவரது இந்த சாதனையை இனிமேல் யாராலும் முறியடிக்க முடியாது.

எந்த கிராண்ட்ஸ்லாம் போட்டியிலும் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை ஒரு வீரர் 10 முறை வென்றதில்லை. நடால் மட்டுமே பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை 11 முறை வென்றுள்ளார் என்பதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் ஆடவர் ஒற்றையரில் பிரெஞ்ச் ஓபன் பட்டம் தவிர ஆஸி.

ஓபன் பட்டத்தை ஒருமுறையும், விம்பிள்டன் பட்டத்தை 2 முறையும், யு. எஸ் ஓபன் பட்டத்தை 3 முறையும் நடால் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை