உத்தரபிரதேச மாநிலத்தில் பரபரப்பு: மோடியின் பிரசார மேடையில் தீ 2 அதிகாரிகள் உட்பட 5 பேர் மீது வழக்கு

தமிழ் முரசு  தமிழ் முரசு
உத்தரபிரதேச மாநிலத்தில் பரபரப்பு: மோடியின் பிரசார மேடையில் தீ 2 அதிகாரிகள் உட்பட 5 பேர் மீது வழக்கு

அலிகார்; பிரதமர் மோடி அலிகாரில் நடந்த தேர்தல் பிரசார மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தால் பரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக 2 அதிகாரிகள் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் நேற்று பிரதமர் மோடி, பாஜ வேட்பாளர்களை ஆதரித்து மேடையில் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது, அவருக்காக வைக்கப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டியிலிருந்து செல்லும் வயரில் திடீரென தீ ஏற்பட்டது.

தொடர்ந்து மோடியின் பாதுகாப்பு அலுவலர்கள் உடனடியாக அந்த தீயை அணைத்தனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விசாரணையில், மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மேடை ஏற்பாட்டாளர்கள் 3 பேர் மீதும், மின்வாரியத்தைச் சேர்ந்த 2 அலுவலர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து, சீனியர் போலீஸ் எஸ்பி ஆகாஷ் குல்கரி கூறுைகயில், ‘‘குளிர்சாதன பெட்டியில் இருந்து சென்ற வயர், ஓவர் ஹீட் ஆனதால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

மற்றபடி எவ்வித அசம்பாவிதமும் இல்லை’’ என்றார்.

.

மூலக்கதை